வாகன சான்றுகளை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு | Timeline extended for revaluation of vehicle documents | Wecares

வாகன சான்றுகளை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு | Timeline extended for revaluation of vehicle documents | Wecares

வாகன சான்றுகளை புதுப்பிக்க 2021 ஆம் ஆண்டு மார்ச் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு  பிறப்பித்தது. கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்த ஆண்டு (2020) பிப்ரவரி முதல் ஜூன் வரையில் காலாவதியான சான்றுகளை ஜூன் மாதத்துக்குள் புதுப்பிக்கும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அவகாசம் வழங்கியது பின் அந்த அவகாசம் டிசம்பர் 31 2020 வரை  நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன உரிமங்களை புதுப்பிக்க காத்திருப்பதை தவிர்க்கவும் கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்கவும் புதிய உத்தரவை மத்திய சாலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது அதன்படி இந்த ஆண்டு 2020 பிப்ரவரி முதல் அடுத்த ஆண்டு (2021) மார்ச் 31ம் தேதி வரை காலாவதியாகும் வாகன உரிமங்களை புதுப்பித்த‌தாகவே கருத வேண்டும். உரிமங்களை புதுப்பிக்காத வாகனங்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இது அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச போலீஸ் துறை மற்றும் போக்குவரத்து துறை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது மத்திய சாலை பாதுகாப்பு துறை.

மேலும் பல நியூஸ்:
இனி ஏர்பேக் கட்டாயம்👉👉 Click here
இனி பழைய வாகனங்களுக்கு அனுமதி இல்லை👉👉 Click here

இனி பம்பர் வைக்ககூடாது👉👉 Click here
Previous Post Next Post