நாம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு வாகனங்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
அது எந்த வகை வாகனமாக இருந்தாலும் அதில் ஓடும் சக்கரம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது
பத்து வருடங்களுக்கு முன்பாக நமக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான் டயர் என்றால் டியூப் மற்றும் டயர் ஆனால் தற்போது காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் டியூப்லெஸ் டயர் என்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இது மட்டுமில்லாமல் இன்னும் பல காற்றே இல்லாமல் இயங்கக்கூடிய டயர்களும் உருவாக்குவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாம் இந்தப் பதிவில் க்யூ ஆர் டியூப்லெஸ் டயர் எது நமக்கு சிறந்ததாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்
டியூப் உள்ள டயர்களின் சிறப்பம்சங்கள்
1.எவ்வளவு நாட்கள் ஒரே இடத்தில் என்றாலும் காற்று குறையவே குறையாது (டயர் நல்ல கண்டிஷனில் உள்ளபோது)
டியூப் உள்ள டயர்களில் உள்ள சிக்கல்கள்
1.டியூபுள்ள டயர்களில் பஞ்சர் என்பது ஆகிவிட்டால் வண்டி சிறிதளவுகூட ஓட்ட இயலாது
2. இந்த வகை டயர்களை பஞ்சப் கொடுப்பதற்கு வெகுநேரம் ஆகம்
. ஆதலால் நாம் செல்லும் வேலை தாமதமாகவும் வாய்ப்புள்ளது
3.இருசக்கர வாகனங்களில் உள்ள ட்யூப் டயர்களுக்கு பஞ்சர் போடுவதற்கு டயரை கழட்டி மட்டுமே பஞ்சர் போட முடியும்
ட்யூப்லெஸ் டயர்கள் இன் சிறப்பம்சங்கள்
1. ட்யூப்லெஸ் டயரில் காற்று குறைவாக இருந்தால் கூட சிறிது தூரம் ஓட்டிச் செல்லலாம்.
2. இந்த வகை டயர்கள் பஞ்சர் ஆகி விட்டாலும் சிறிது தூரம் ஓட்டிச் செல்லலாம் எந்தவித ஆபத்தும் நேரிடாது
3. பஞ்சர் போட வேண்டுமென்றால் சிறிது நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ளும்
4. இருசக்கர வாகனமாக இருந்தால் டயரை கழட்டாமல் பஞ்சர் போட்டு விடலாம்.