இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகி புதிய திட்டம் ஒன்றை அறிமுக படுத்தியுள்ளது. இந்த கொரோன காலத்தில் புதிய கார்களை விற்க முடியாத நிலை உருவாகி உள்ளது ஆதலால் மாருதி சுசூகி நிறுவனம் ஒரு புதிய உக்தியை கையாள்கிறது அதவது. கார்களை வாடகைக்கு விடும் புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மாருதி இன் பல விதமான கார்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனவும் 12 மாதம் முதல் 24 மாதம் வரை வாடகைக்கு எடுத்து ஓட்டலாம் என்று கூறியுள்ளது. இதற்கு ஒரு மாதத்திற்கு 15,000 முதல் வாடகை இருக்கலாம் என்று கூறியுள்ளது.
வாடகை காலம் முடிந்த பிறகு தற்போதைய மார்கெட் விலைக்கு அதே வாகனத்தை சொந்தமாக்கிக்கொள்ளளாம் எனவும் கூறி உள்ளது. அல்லது வேறு ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது மாருதி நிறுவனம்.
இந்த திட்டத்தை டெல்லி மற்றும் பெங்களூரில் மட்டும் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து மற்றும் பல கார் நிறுவனம் இதனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.